கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத் திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின் பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே