கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும் நீங்கிடா திருந்துநீ என்னோ டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற் றறிவுரு வாகிநான் உனையே பாடவும் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே