கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச் சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர் வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே