கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத் தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன் உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே