கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என் தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே