கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல் ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே