கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில் ஆறு மேவிய வேணிஎம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால் ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே