கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும் வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே