கூலி என்பதோர் அணுத்துணை யேனும் குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன் மாலி னோடயன் முதலியர்க் கேவல் மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர் சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்