பாடல் எண் :887
கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே
திருச்சிற்றம்பலம்
ஈண்டு மேற்கொண்ட குறட்பா
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு ( ன இரவு ன )
நெஞ்சறை கூவல்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.