கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய் ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும் எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான் சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும் சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில் நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய் நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்