கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே