கைதலத் தோங்கும் கனியின் என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம் செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் கனியில் - பி இரா பதிப்பு அறிந்ததே - முதற்பதிப்பு, பொ சு, ச மு க பதிப்பு