கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக் காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன் பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே