கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ மறைத்தேன் வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் ஐயவோ - படிவேறுபாடு ஆ பா