கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய் படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம் அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம் ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள் கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக் கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே