கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக் கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள் கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான் கடிமணம் புரிந்தனன் என்றாள் ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம் ஒளிஎனக் களித்தனன் என்றாள் இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள் என்தவத் தியன்றமெல் லியலே