கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம் பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே