கொடியேன் பிழைநீ குறியேல் அபயம் கொலைதீர் நெறிஎன் குருவே அபயம் முடியேன் பிறவேன் எனநின் அடியே முயல்வேன் செயல்வே றறியேன் அபயம் படியே அறியும் படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் அடியேன் இனிஓர் இறையும் தரியேன் அரசே அருள்வாய் அபயம் அபயம்