கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக் குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன் கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே