கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம் குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார் புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன் நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும் நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும் அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ திருச்சிற்றம்பலம் கலி முறையீடு கலி விருத்தம் திருச்சிற்றம்பலம்