கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன் மலைவுறு சமய வலைஅகப் பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் நலையல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே