கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே