கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல் துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர் கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோ நற் கடல்அமுதத் தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே