கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும் துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிறம் உள்ளுவார் உள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ