கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும் கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே