கோஎன எனது குருஎன ஞான குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே பூஎன அதிலே மணம்என வணத்தின் பொலிவென வயங்கிய பொற்பே தேவெனத் தேவ தேவென ஒருமைச் சிவம்என விளங்கிய பதியே வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே