கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே
கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன் வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப் பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ