கோடி நாவினும் கூறிட அடங்காக் கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர் நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும் ஊடி னாலும்மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தமப் பொருளே