கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும் குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும் வானமுதே ஆனந்த மழையே மாயை வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில் தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே