கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி