கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப் பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ