கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண் தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர் சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர் சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத் தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே