கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்