கோலக் குறமான் கணவா சரணம் குலமா மணியே சரணம் சரணம் சீலத் தவருக் கருள்வோய்சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் ஞாலத் துயர்தீர் நலனே சரணம் நடுவா கியநல் ஒளியே சரணம் காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்