கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித் தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர் வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய் ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே