கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக் கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல் பரிவி லாமலே பயன்இழந் தனன்காண் சாவ நீயில தேல்எனை விடுக சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம் ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே