கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக் கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக் காவேமெய் அறிவின்ப மயமே என்றன் கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத் தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத் தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப் பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே