கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான குலமணியே குகனேசற் குருவே யார்க்கும் தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும் பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும் போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச் சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல் செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே திருச்சிற்றம்பலம் ஜீவசாட்சி மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்