கோவேநின் பதம்பதுதியா வஞ்ச நெஞ்சக் கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன் சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன் தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர் தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே