சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் நண்ணியும் பிறவிடத் தலைந்தும் பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே