சகமாகிச் சீவனாய் ஈச னாகிச் சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி இகமாகிப் பதமாகிச் சமய கோடி எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற் பகமாகிப் பரமாகிப் பரம மாகிப் பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே