சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப் பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன் பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப் புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன் உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே