சங்க பாணியைச் சதுமு கத்தனைச் செங்கண் ஆயிரத் தேவர் நாதனை மங்க லம்பெற வைத்த வள்ளலே தங்க ருள்திருத் தணிகை ஐயனே
சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன் மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார் கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ