சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை தாயி லார்எனத் தயங்குகின் றாயே மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும் உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர் தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே