சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள் தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள் செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப் பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய் பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும் எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே