சதிசெயும் மங்கையர் தமது கண்வலை மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே நிதிசிவ சண்முக என்று நீறிடில் வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே