சதுமறை() ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான் அதுஇது என்னாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி () சதுர்மறை - பொ சு, ச மு க பதிப்புகள்