சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில் தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப் புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப் புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப் பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித் தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித் தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே