சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித் தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென் உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும் ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர் எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே